‘இரவில் பிறந்த நாள் விழா.. காலையில் தனக்குத்தானே போலீஸ் கொடுத்த தண்டனை!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 03, 2019 01:59 PM

ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police officer commits suicide by shooting himself on his birthday

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு என்னும் கிராமத்தில் வசிக்கும் கண்ணன் என்பவரது மகன் மணிகண்டன். இவர் ஆவடி வீராபுரத்தில் உள்ள சிறப்பு காவல்படை மூன்றாம் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். மணிகண்டனுக்கு இன்று 26 -ஆவது பிறந்தநாள். அதனால் நேற்று இரவு கீழ்ப்பாக்கம் சிறப்பு ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றும் சக காவலர்களுடன் மணிகண்டன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதனையடுத்து இன்று அதிகாலை மணிகண்டனது அறையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. உடனே சக காவலர்கள் ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அந்த அறையினுள் மணிகண்டன் தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்டு ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்துள்ளார்.

பின்னர் மணிகண்டனின் உடலை மீட்ட போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

தன்னுடைய பிறந்தநாள் அன்றே காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மணிகண்டன் இறந்த தகவலை பெற்றோருக்கு தெரிவித்திருக்கும் நிலையில், அவரது செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர் காதல் பிரச்சனைக்காக தற்கொலை செய்துள்ளாரா? இல்லை வேறேதும் காரணமா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #POLICE #SUICIDE #CHENNAI #DEATH