'கியர் வண்டி ஓட்ட தெரியாது.. அதனால நான் முடிவு பண்ணேன்’..விநோத திருடனின் வாக்குமூலம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 03, 2019 01:40 PM

சென்னையில் கியர் வண்டி ஓட்டத் தெரியாததால், பெண்கள் ஓட்டும் ஸ்கூட்டி ரக வண்டிகளை மட்டும் திருடிய விநோத திருடன் கைது செய்யப்பட்டுள்ளதும், விசாரணையில் அவர் கூறிய வாக்குமூலமும் போலீஸாரிடையே கடுப்பையும் கலகலப்பையும் உண்டாக்கியுள்ளது.

\'Dont know to drive gear type 2 wheeler, my target is different\',thief

சில நாட்களாகவே மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போயிருக்கின்றன. இந்த புகார்கள் அதிகரித்ததும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். இன்னொருபுறம் சிசிடிவி கேமராக்கள் இல்லாத பகுதிகளில் பைக் திருடுபோன சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன. அவற்றை எல்லாம் அலசி ஒருவழியாக சிட்லப்பாக்கம் ஹரிஹரனை கண்டுபிடித்துள்ளனர்.

ஹரிஹரன் எப்போதும் பெண்கள் மற்றும் சில ஆண்கள் ஓட்டும் இலகுரக வாகனமான ஸ்கூட்டியை திருடுவதையே தனது தனி ஸ்டைலாக வைத்து திருடி வந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தனக்கு கியர் வண்டி ஓட்ட வராததாலும், திருடுவதற்கு எளிமையாக இருப்பதாலும் ஒரே சாவியை போட்டு பல ஸ்கூட்டிகளை திருடி ஆங்காங்கே உள்ள ரயில் நிலைய பார்க்கிங் ஸ்டால்களில் வண்டியை நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் தனது வாடிக்கையாளர்களுக்கு 2 முதல் ரூ.10 ஆயிரம் வரைக்கும் விற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இவர் மீது பல ஸ்டேஷன்களில் பல புகார்கள் இருப்பதை அடுத்து இவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Tags : #CRIME #THIEF #THEFT #TWOWHEELER