மேலும் ஒருவாரம் 'நீட்டிக்கப்படும்' பிக்பாஸ்.. காரணம் என்ன?

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 04, 2018 04:19 PM
Bigg Boss Tamil to be extended for six days

பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் 6 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

 

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதன் 100-வது நாள் வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

 

இந்தநிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் ஒருவாரம் தள்ளிப் போவதாக நமக்குத் தகவல் கிடைத்தது.இதுகுறித்து உண்மையா? என அறிந்துகொள்ள நம்பத்தகுந்த வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது,''உண்மைதான்.100-வது நாள் திங்கட்கிழமையாக வருவதால் நிகழ்ச்சியை, மேலும்  6 நாட்களுக்கு நீட்டித்திருப்பதாக,'' தெரிவித்தனர்.

 

இதனால் செப்டம்பர் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு,பிக்பாஸ் டைட்டிலை வென்றவர்கள் குறித்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.