’விமர்சிப்பது குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைதுசெய்யப்பட வேண்டியவர்களே' : கமல்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 04, 2018 03:13 PM
politicians should also be arrested says kamal

பாஜகவினை 'விமானத்தில்' விமர்சித்த சோபியா, தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனின் புகாரின் பேரில் சிறை சென்று தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

பல்வேறு கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில்,  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, பொது இடங்களில் குரல் எழுப்புவதும், விமர்சிப்பதும்  குற்றமெனில் அத்தனை  அரசியல்வாதிகளும் கைது செய்யப்படவேண்டிய குற்றவாளிகளே என்று பதிவிட்டுள்ளார். மேலும், சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில்  எடுக்கிறோம். அரசியல்வாதிகள்  ஏன் வெளியே திரிகிறார்கள்? என்று பதிவிட்டுள்ளவர், தானும் அரசியல்வாதிதான்  என்பதை உணர்ந்தே சொல்வதாகவும் ட்வீட்டியுள்ளார்.

Tags : #TAMILISAISOUNDARARAJAN #KAMALHAASAN #SOPHIA #MAKKALNEETHIMAIAM