பிரபலங்கள் கலந்துகொண்ட மறைந்த நடிகை ‘ஸ்ரீதேவி’யின் நினைவஞ்சலியில் அஜித்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 14, 2019 09:54 PM

நடிகை ஸ்ரீதேவியின் மறைவையொட்டி சென்னையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற நினைவு அஞ்சலியில் பல பாலிவுட் திரைக்கலைஞர்களுடன் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டுள்ளார்.

Ajith Kumar and his wife participates in Sridevi\'s death anniversary

குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கி பின்னாளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் நடித்து புகழின் உச்சியைத் தொட்டவர் நடிகை ஸ்ரீதேவி. கடைசியாக தமிழில் நடிகர் விஜய் நடித்த புலி படத்தில் நடித்திருந்த ஸ்ரீதேவி, துபாய் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள கடந்த வருடம், பிப்ரவரி 24-ஆம் தேதி அங்கு சென்றிருந்தபோது அங்கேயே மரணமடைந்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் அவரின் திதிப்படி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று(பிப்ரவரி 14) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், நடிகர் அஜித்திற்கு அழைப்பு கொடுத்திருந்தார். அதன்படி அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சென்னை சிஐடி நகர் அருகே உள்ள ஸ்ரீதேவியின் இல்லத்தில் நடந்த ஸ்ரீதேவியின் நினைவு அஞ்சலியில் கலந்து கொண்டுள்ளார்.

முன்னதாக ஸ்ரீதேவி நடித்த இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் அஜித் நடித்திருந்தார். இதுமட்டுமின்றி போனி கபூர் தயாரிப்பில் அடுத்து இரண்டு படங்களில் அஜித் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நினைவு அஞ்சலியில் ஸ்ரீதேவியின் உறவினர் ஜான்வி கபூர், குஷி கபூர், அனில் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : #SRIDEVI #AJITHKUMAR #THALA #SHALINI