'பறக்கும் முத்தங்களை' பகிர்ந்து கொண்ட விராட்-அனுஷ்கா தம்பதி.. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 21, 2018 03:10 PM
Watch Video: Virat-Anushka exchange flying kisses

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன் எடுத்து இருந்தபோது ‘டிக்ளேர்’ செய்தது.

 

இதனால் இங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது.

 

முன்னதாக கேப்டன் விராட் கோலி 103 ரன்கள் குவித்து டெஸ்ட் போட்டியில் தனது 23-வது சதத்தினைப் பதிவு செய்தார். இதற்காக கிரிக்கெட் பிரபலங்கள்,ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

 

 

 

இதேபோல அவரது காதல் மனைவி அனுஷ்காவும் கேலரியில் நின்று பறக்கும் முத்தங்கள் அனுப்பி கோலியைப் பாராட்ட, பதிலுக்கு கேப்டனும் முத்தங்களை வாரி வழங்கியுள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை வாரி வழங்கி வருகிறார்கள்.