’காசு இருக்கும்போது வாங்க’..ஓனர் சொன்ன நேரத்துக்கு வந்த வித்தியாசமான கொள்ளையர்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 25, 2018 02:56 PM
Shop Owner Asks Thieves To \'Come Back When He Has More Money\', They Do

பெல்ஜியத்தின் இ-சிகரெட் ஷாப் ஒன்றுக்குள் 6 கொள்ளையர்கள் புகுந்துள்ள்னர். ஆனால் அந்த கடைகாரரோ மனவேதனையிலும் கொள்ளையர்களை எதுவும் செய்ய முடியாத இயலாமையிலும் ‘இப்போது ஒன்றுமில்லை.. கடையில் அதிக பணம் இருக்கும்போது வந்து கொள்ளையடியுங்கள்.. நாளை மாலை வாருங்கள்’ என்று கூறியிருக்கிறார். அதை நம்பி கொள்ளையர்கள் சென்றுள்ளனர்.


எனினும் கடைகாரர் சொன்ன வார்த்தைக்காக மீண்டும் பணம் இருக்கும் தருணம் கொள்ளை அடிக்க வந்து அந்த கொள்ளையர்கள் ஆச்சரியப்படுத்தியுள்ளனர். ஆனால் இம்முறை கடைகாரர் போலீஸிடம் முன்கூட்டியே தகவல் அளித்திருந்தார்.


ஆனால் கொள்ளையர்கள் மீண்டும் சொன்ன நேரத்துக்கு வருவார்கள் என்று அந்த கடைகாரர் சொன்னதை போலீஸ் நம்பவே இல்லை. பின்னர் கடைகாரர் உறுதியாக சொன்னதும், போலீஸார் அந்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக கடைக்கு பின்புறம் வந்து காத்திருந்து கச்சிதமாக கொள்ளையர்களை பிடித்துள்ளனர். கடைக்காரரின்  வார்த்தைகளை நம்பி அவர் சொன்ன நேரத்துக்கு வந்த கொள்ளைக்காரர்களின் செயல் வைரலாகி வருகிறது.

Tags : #ROBBERY #BELGIUM #BIZARRE #GULLIBLE THIEVES