இணையத்தில் வைரலான ‘ஹிட்மேன்’ மனைவி வெளியிட்ட வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 12, 2019 05:10 PM

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் மகள் சமைராவின் ‘க்யூட் ஸ்மைல்’ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Rohit Sharma\'s daughter cute smile video goes viral

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரோஹித் ஷர்மாவுக்கும் அவரது காதலியான ரித்திகாவுக்கும் கடந்த 2015 -ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதனைப் படைத்தது. அப்போது ரோஹித் ஷர்மாவுக்கு கூடுதல் ஆனந்தமாக ஒரு செய்தி வந்தது. அதில், ரோகித் ஷர்மாவின் மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது என தகவல் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை பிறந்த சில நாள்களில் தனது டுவிட்டர் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தை ரோஹித் ஷர்மா வெளியிட்டார். மேலும் ரோகித் ஷர்மா தனது குழந்தைக்கு ‘சமைரா’ என பெயர் சூட்டினார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் மகள் ‘சமைரா’அழகாக சிரிக்கும் வீடியோ ஒன்றை ரோஹித் ஷர்மாவின் மனைவி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

😍🥰❤️

A post shared by Ritika Sajdeh (@ritssajdeh) on

Tags : #ROHITSHARMA #CHILD #SMILE #VIRALVIDEO