எங்க போனாலும் ‘தல’தான் மாஸ்.. ரசிகரின் உருக்கம்.. தோனி நெகிழ்ச்சி.. சிலிர்க்க வைக்கும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 10, 2019 10:17 PM

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி என்றாலே பலருக்கும் பிரம்மிப்பு குறைந்தபாடில்லை. முன்னாள் கிரிக்கெட் கேப்டன், தற்போதைய ஆகச்சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் என்று பல அடையாளங்களைக் கொண்ட தோனியின் தலைமையில் இந்திய அணி பெற்ற வெற்றிகள் இன்னும் கிரிக்கெட் ரசிகர்களின் கண்ணிலிருந்து மறந்திருக்க வாய்ப்பில்லை.

Watch:Fan breached security authorities and touched Dhoni\'s feet Viral

முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதிக்கொண்ட தொடர் கிரிக்கெட் போட்டிகளின்போது ஆஸ்திரேலிய ரசிகர்களால் தோனிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு,  இணையதளத்தில் மிக வேகமாக பரவியது. தோனி என்றால் ரசிகர்கள் இப்படி  உற்சாகமாகிவிடுவது புதிதில்லை என்றாலும், மற்றுமொரு மெய்சிலிர்க்கும் சம்பவமொன்று நியூஸிலாந்து மைதானத்தில் தோனி முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டு, அடுத்து டி20 போட்டிகளில் விளையாண்டது. நியூஸிலாந்தின் ஹேமில்டன் மைதானத்தில் 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் வீரர் தோனியை நோக்கி இளம் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மிக வேகமாக பாதுகாப்பாளர்களைத் தாண்டி மைதானத்துக்குள், கைகளில் ஒரு தேசியக்கொடியை ஏந்தியபடி ஓடி வந்த காட்சி அங்கு இருந்த அனைவரையும் மிரட்சி அடையச் செய்தது. ஓடிவந்தவர் நேராக தோனியை நோக்கி வந்து மிகவும் உருக்கத்துடன் மண்டியிட்டு தோனியின் கால்களை தொடுகிறார்.

இந்த நிகழ்ச்சியினால் நெகிழ்ச்சி அடைந்த தல தோனி, சட்டென பதறி அந்த இளம் கிரிக்கெட் ரசிகரின் கைகளில் இருந்த தேசியக் கொடியை தட்டென பறித்துக்கொண்டுவிட்டு, பின்னர் அவரைத்தேற்றி அனுப்பிவிட்டு தேசியக்கொடியை தன் கைகளில் எடுத்துக்கொண்டு நடக்கிறார்.  இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது, இந்தியர்களையே மெய்சிலிர்க்க வைத்த இந்த காட்சி இணையதளத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

Tags : #MSDHONI #VIRALVIDEO #TEAMINDIA #BCCI #NZVIND #3RODI