'எனகே விபூதி அடிக்க பாக்குறியா'...தெறிக்க விட்ட 'தல தோனி'...தெறி வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 09, 2019 02:08 PM

நியூசிலாந்து நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்று சாதனை படைத்தது.தற்போது தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் இந்திய அணி,முதல் போட்டியில் தோல்வியை தழுவியது.

MS Dhoni’s single-handed defense off Ish Sodhi,video goes viral

இந்நிலையில் நேற்று இரண்டாவது டி20 போட்டியானது ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை  7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி.எந்த போட்டி நடந்தாலும் வைரலாகும் தல தோனி,இந்த போட்டியிலும் தனது அசாத்தியமான திறமையினால் வைரலாகி இருக்கிறார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் 4வதாக களமிறங்கிய தோனி,சிக்ஸ் அடிப்பதற்காக வேகமாக எல்லைக் கோட்டிற்கு வெளியே சென்றார்.ஆனால் சிக்ஸ் அடிப்பதற்கு வாய்ப்பில்லாமல் போக பந்தை தடுத்து சிங்கிள் ரன் எடுக்க ஓடினார்.ஆனால் பந்து எப்படியும் தன்னிடம் வந்துவிடும்,அப்போது தோனியை அவுடாக்கி விடலாம் என நியூசிலாந்து விக்கெட் கீப்பர்காத்துக்கொண்டிருந்தார்.

ஆனால் தோனியோ 'நீ படிச்ச ஸ்கூல்ல, நான் ஹெட்மாஸ்டர் டா' என்ற ரீதியில் பந்தை விக்கெட் கீப்பரிடம் செல்ல விடாமல் தடுத்து விட்டு ரன் எடுக்க ஓடிவிட்டார் தோனி.தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் ஹிட் அடித்து வருகிறது.

Tags : #MSDHONI #TWITTER #CRICKET #ISH SODHI #T20I