‘1 பந்துதான்.. 17 ரன்னில் மொத்த டீமையும் கதிகலங்க வைத்த வீரர்’.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 08, 2019 11:03 AM

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 போட்டி ஒன்றில் பந்துவீச்சாளர் ரைலி மெரித் வீசிய 1 பந்தில் 17 ரன்கள் கொடுத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Australian bowler Riley Meredith concedes 17 runs in 1 ball

ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. அதில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் ஹோபர்ட்  ஹரிக்கேன்ஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற ரெனிகேட்ஸ் அணி பௌலிங்கைத் தேர்வு செய்தது. இதனை அடுத்து ஹரிக்கேன்ஸ் அணி பேட்டிங் ஆடத் தொடங்கியது.

அதில் ஹரிக்கேன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஹரிக்கேன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 2 -வது இன்னிங்ஸில், ஹரிக்கேன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ரைலி மெர்டித் முதல் ஓவரை வீசினார். முதல் மூன்று பந்துகளில் 1 ரன் மட்டுமே கொடுத்திருந்தார். ஆனால் அடித்து வீசிய 4 -வது பந்து நோ பாலாக போகவே அதை நடுவர் ஃப்ரீ ஹிட் என கொடுத்தார். அடுத்து வீசிய ஃப்ரீ ஹிட் பந்தும் வொய்டாக போக அதை கீப்பர் விட்டுவிட்டதால் அது பவுண்ட்ரிக்கு சென்றது. அதனையடுத்து வீசிய பந்தும் நோ பாலாக போக அதை பேட்ஸ்மேன் பவுண்ட்ரிக்கு விளாசினார். மறுபடியும் ரைலி மெர்டித் 4 -வது பந்தை நோ பாலாக வீச அதையும் பேட்ஸ்மேன் பவுண்ட்ரிக்கு அடித்தார். பின்னர் மெர்டித் சரியாக வீச அதை ரெனிகேட்ஸ் அணி வீரர் சிங்கில் தட்டி ஓடினார்.

இதன் மூலம் 1 பந்தில் 17 ரன்களை கொடுத்த ஹரிக்கேன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ரைலி மெர்டித் அந்த ஓவர் முடிவில் 23 ரன்களை கொடுத்திருந்தார்.

Tags : #BBL08 #CRICKET #AUSTRALIA #BIGBASH #T20