'டி20-யில் இப்படி ஒரு சாதனையா?'.. ரசிகர்களின் பாராட்டு மழையில் ஸ்மிருதி மந்தனா!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 06, 2019 05:40 PM

டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சாதனை படைத்துள்ளார்.

fastest half century in T20 - Smriti Mandhana Creates History

நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடும் முதலாவது டி20 போட்டி நடைபெற்றது.  முன்னதாக இந்திய அணி 102 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

எனினும் விடாமுயற்சியாக ஆடிக்கொண்டிருந்த இந்திய அணிக்கு மற்றும் ஒரு பூஸ்டராக மந்தனா  24 பந்துகளை எதிர்கொண்டு இறங்கி  அரைசதம் அடித்திருக்கிறார். இதில் இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். எனினும் மந்தனா ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்  ஆகியதோடு 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனால் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா ஐசிசி ஒருநாள்  தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி 2-1 என்கிற கணக்கில் தொடரை கைப்பற்றியதில் அதிரடியாக அடித்து தொடரை கைப்பற்ற ஸ்மிருதி மந்தனா காரணமாக இருந்துள்ளார்.  2018-ஆம் ஆண்டில் இருந்து 15 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 8 அரைசதங்கள் அடித்துள்ள நிலையில்  ஸ்மிருதி மந்தனாவை, பெண்கள் கிரிக்கெட் அணியின் கோலி என்று ரசிகர்கள் வர்ணிக்கத் தொடங்கியுள்ளனர்.

Tags : #SMRITIMANDHANA #BCCI #CRICKET #INDIA