'இவர் தான் நம்ம டீமோட சொத்து'...டி20-ல எப்படி கலக்க போறாருனு பாருங்க...மனம் திறந்த அதிரடி பேட்ஸ்மேன்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 05, 2019 10:51 PM

ஐசிசியின் வளரும் வீரர் என்ற விருதினை பெற்ற ரிஷப் பந்த்,தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் இந்திய அணியின் சொத்தாகி வருவதாக ஷிகர் தவண் புகழாரம் சூட்டியுள்ளார்.

Rishabh Pant is an asset for the team says Shikhar Dhawan

பௌன்செர் பந்துகளை எதிர்கொள்ள  டென்னிஸ் பந்தில் பயிற்சி எடுத்து வரும் ஷிகர் தவண்,ஒரே ஷாட்டை திரும்பத் திரும்ப ஆடி பயிற்சி எடுத்தால்,நிச்சயம் போட்டியின்போது நன்றாக ஆட முடியும் என தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பயிற்சி செய்யும்போது,த்ரோ செய்யப்படும் பந்துகளை ஒரே இடத்தில் பிட்ச் செய்வது என்பது கடினம்.இந்த நேரத்தில் தான் டென்னிஸ் பந்தில் பயிற்சி செய்வது நமக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

மேலும் ரிஷப் பந்த் குறித்து கூறுகையில் அவர் நன்றாக அடித்து ஆடக்கூடிய ஆக்ரோஷ பேட்ஸ்மேன், அணிக்கு அவர் ஒரு சொத்து.எதிரணியிடமிருந்து ஆட்டத்தை குறைந்த நேரத்தில் நம்ம பக்கம் திருப்பக் கூடியவர். டி20 கிரிக்கெட்டிலும் கிடைத்த இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொள்வார்.அவர் நிச்சயம் டி20 போட்டியில் கலக்குவார் என ஷிகர் தவண் தெரிவித்துள்ளார்.

Tags : #CRICKET #BCCI #SHIKHAR DHAWAN #RISHABH PANT