மிரட்டிய இளம் வீரர், கைகொடுத்த பாண்ட்யா...அபார வெற்றியடைந்த இந்தியா!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 08, 2019 03:16 PM

இந்தியாவுக்கு 159 ரன்கள் இலக்கு வைத்த நியூஸிலந்து அணி.

india beat New Zealand against 2nd t20

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்கிற கணக்கில் வென்று சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி விளையாடி வருகிறது. நடந்து முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில் நியூஸிலாந்து எதிரான 2 -வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனை அடுத்து பந்து வீச்சைத் தொடங்கிய இந்திய வீரர்கள் அதிரடியாக வீசத் தொடங்கினர்.

இதில் க்ருணல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஆனாலும் நியூஸிலாந்து வீரர்களான ராஸ் டெய்லர் மற்றும் கிராண்ட்ஹோம் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடத்தொடங்கியது இந்திய பௌலர்களுக்கு நெருக்கடியை கொடுக்கத் தொடங்கியது. இதில் கிராண்ட்ஹோம் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 28 பந்துகளில் 50 ரன்களை எடுத்து அசத்தினார்.

இந்த இணையை ரன் அவுட்டின் மூலம் தமிழக வீரரான விஜய் சங்கர் பிரித்தார். அதனை அடுத்து வந்த நியூஸிலாந்து வீரர்கள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் 20 ஓவர்களின் முடிவில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

தற்போது 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மாவும், ஷிகார் தவானும் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். ரோஹித் ஷர்மா 29 பந்துகளில் 50 ரன்களும், தவான் 31 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த இளம் வீரரான ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 40 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் தோனி 20 ரன்களும், விஜய் சங்கர் 14 ரன்களும் எடுத்திருந்தனர். 18.5 ஓவர்களின் முடிவில் 162 ரன்கள் எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றது.

Tags : #TEAMINDIA #ICC #BCCI #NZVIND #T20 #KRUNALPANDYA