தாறுமாறாக ஓடிய ஜீப், கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 11, 2019 05:45 PM

சந்தையில் தாறுமாறாக ஓடிய ஜீப்புக்கு அடியில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Accident in karnataka caught on cctv camera

கர்நாடகா மாநிலம் புத்தூர் தாலுகாவில் உள்ள சந்தை ஒன்றில் பெண் ஒருவர் கைகுழந்தையுடன்  நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஒரு ஜீப் வந்துள்ளது. இதை சற்றும் கவனிக்காத அப்பெண்ணின் மீது ஜீப் ஏறி இறங்கியுள்ளது.

உடனே சந்தையில் இருந்த பொதுமக்கள் உடனடியாக பெண்ணையும் குழந்தையும் மீட்டுள்ளனர். இதில் லேசான காயங்களுடன் பெண்ணும் கைக்குழந்தையும் உயிர்தப்பியுள்ளனர்.

இதனை அடுத்து விசாரித்ததில் ஜீப்பின் உரிமையாளர் ஜீப்பை சாவியுடன் நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது சந்தையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ஆர்வமிகுதியில் ஜீப்பில் இருந்த சாவியை திருகியுள்ளனர். இதனால் வேகமாக முன்னே நகர்ந்த ஜீப் அருகே கைக்குழந்தையுடன் இருந்த பெண்ணின் மேல் ஏறி இறங்கி ஒரு கடையின் சுவற்றில் மோதி நின்றுள்ளது.

இந்த காட்சிகள் அனைத்தும் சந்தையிலுள்ள ஒரு கடையில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கைக்குழந்தையுடன் வந்த பெண்ணின் மேல் ஜீப் ஏறி இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KARNATAKA #ACCIDENT #BIZARRE #WOMAN #CHILD