நம் ஃபோட்டோக்களை வைத்து சம்பாதிக்கும் ‘இந்த’ 29 ஆப்ஸ்.. ஆப்பு வைத்த கூகுள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 05, 2019 06:11 PM

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நாம் டவுன்லோடு செய்யும் பலவிதமான அப்ளிகேஷன்கள் நம் தனி நபர் தகவல்களை திருடுவது என்பது சமீப காலங்களில் வெளியாகும் அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது.

google removes these 29 photo editing apps from its play store

பொதுவாகவே கூகுள் அப்ளிகேஷன்களில் நாம் தரவிறக்கம் செய்யும் நிறைய ஆப்கள், நம் போனில் இன்ஸ்டால் செய்யப்படுவதற்கு முன்பாகவே நம் மொபைலில் இருக்கும் அனைத்து புகைப்படங்கள், வீடியோ, டாக்குமெண்ட் மற்றும் பல தகவல்களை READ செய்ய அனுமதி கேட்கும். அதெப்படி நம் தகவல்களை ஒரு அப்ளிகேஷன் பார்ப்பதற்கு அனுமதிக்க முடியும் என்று முற்போக்காக மூளை யோசித்தால், வேற வினையே வேண்டாம் அந்த ஆப்பினை இன்ஸ்டால் செய்யவே முடியாது. பிறகெதற்கு அந்த ஆப் இன்ஸ்டால் ஆக நம்மிடம் அனுமதி கேட்கிறது என்றால் அதுதான் அந்த ஆப் டெவலப்பர்களிடம் கொஞ்சநஞ்சம் இருக்கும் தொழில்தர்மம்.

அதிலும் புகைப்பட ஆப்கள் என்றால் சொல்லவே வேண்டாம். தனிநபர் தகவல் அல்லது அந்தரங்கத்தின் மிக முக்கியமான சொத்து புகைப்படங்கள்தான். பலரும் புகைப்பட எடிட் செய்ய, மேக்கப் செய்து மெருகேற்ற, கண்ணாடி மாட்ட, முகத்தில் பூனைக்குட்டி-எலிக்குட்டி மீசைகளை வரைய என பலவிதமாக புகைப்பட ஆப்களை பயன்படுத்துவதுண்டு.

ஆனால் பலவிதமான அப்ளிகேஷன்கள் இதற்கென நம் புகைப்படங்களை READ செய்யும் நோக்கில் வந்து பின்னர் தனிநபர் புகைப்படங்களை திருடி அவற்றை மார்ஃபிங் உள்ளிட்ட தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வேறுவிதங்களாக மாற்றி இணையத்தில் புழங்கவிட்டு அந்த புகைப்படங்களை வைத்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் சம்பாதிக்கின்றன. இன்னொரு விதமாக பதின்ம புகைப்படங்களை பதிவிடும் ரகசியமான இணையதள அதிபர்கள் பலரிடம் டீல் ஒன்றை போட்டு கோடிகளுக்கு நம் புகைப்படங்களை மொத்தமாக விற்றுவிடுகின்றன. 

இவற்றை எல்லாம் அதிரடியாக ஆய்வு செய்த கூகுள் சுமார் 29 ஆப்களை அதிரடியாக பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

Tags : #GOOGLE #APP #GOOGLEPLAYSTORE #BIZARRE