விபத்துக்குள்ளான திமுக பிரமுகருக்கு அதிமுக அமைச்சர்கள் உதவி.. நெகிழ வைத்த செயல்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 08, 2019 12:04 PM

சாலை விபத்தில் சிக்கிய திமுக பிரமுகருக்கு அதிமுக அமைச்சர்கள் உதவியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ADMK ministers helping DMK cadre who met road accident

புதுக்கோட்டையில் நடைபெற்ற நலத்திட்டப்பணிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சுகாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் இரவில் பாதுகாப்பு வாகனங்களுடன் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது விராலிமலை அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது சாலை மக்கள் கூட்டமாக இருப்பதை பார்த்த அமைச்சர்கள் இருவரும் தங்களது காரை விட்டு கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் விசாரித்ததில் ஒருவர் வாகன விபத்தில் அடிபட்டு இருப்பதாகவும் அவர் விராலிமலை அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த திமுக பிரமுகர் பிச்சைக்கண்ணு என்பதும் தெரியவந்துள்ளது.

உடனடியாக அமைச்சர்கள் இருவரும் காவல் துறையினரிடம் பேசி தங்களது பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.திமுக பிரமுகருக்கு உடனடியாக அதிமுக அமைச்சர்கள் செய்த இந்த உதவியால் அங்கு கூடியிருந்த மக்கள் அவர்களை பாராட்டியுள்ளனர்.

Tags : #TAMILNADU #POLITICIANS #ACCIDENT #HELP #ADMK