‘ஆபரேஷன்’ செய்த பெண்ணின் வயிற்றில் மருத்துவர்கள் மறந்துவைத்த நினைவுப்பரிசு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 10, 2019 05:54 PM

திரைப்படங்களில் வருவது போல ஆபரேஷன் செய்துமுடிக்கும்போது முக்கியமான உபகரணமாகிய ஆபரேஷன் கத்தரியினை நோயாளியின் வயிற்றினுள்ளேயே மருத்துவர்கள் மறந்து வைத்து தைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

surgeons found Scissors in a woman stomach, left before 3 months

சுமார் 3 மாதங்களுக்கு முன்பாக நடந்துள்ள இந்த சம்பவத்துக்கு பிறகு தற்போது அந்த நோயாளி மருத்துவமனைக்குச் சென்று எக்ஸ்-ரே எடுத்து பார்க்கும்போதுதான் தனது வயிற்றுப் பகுதிக்குள் கத்தரிக்கோல் இருப்பதை கண்டறிந்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த நிஜாம் இன்ஸ்டிடுயூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை ஹைதராபாத்திலேயே மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற மருத்துவமனை ஆகும். இங்குதான் மேற்கண்ட பரபரப்புச் சம்பவமானது ஒரு 33 வயது பெண்ணுக்கு நேர்ந்துள்ளது. 

முன்னதாக ஆபரேஷன் செய்துகொண்ட இப்பெண்ணுக்கு, பின்னாளில் அடிவயிற்றில் அடிக்கடி வலி ஏற்படத் தொடங்கியது. முதலில் இதனை ஆபரேஷன் செய்ததால் உண்டான வலி என்று சாதாரணமாக அப்பெண் எடுத்துக்கொண்டாலும், வயிற்றில் ஒரு கத்தரிக்கோல் இருந்தால் அது குடலில் ஏற்படுத்தும் ரணம் சாதாரணமல்லவே? ஆகையால் அதிக வலிக்கு பிறகு, மீண்டும் பொறுக்க முடியாமல் அதே நிஜாம் மருத்துவமனைக்கு அப்பெண் வந்துள்ளார். 

அப்போதுதான் தனது வயிற்றில், ஒன்றல்ல இரண்டு கத்தரிக்கோல்களை வைத்து ஆபரேஷன் செய்து முடித்த பின்னர் டாக்டர்கள் எடுக்க மறந்துவிட்டதை எக்ஸ்-ரே மூலம் அந்த பெண் அறிந்துகொண்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையின் உயர்மட்ட நிர்வாகக் குழுவானது, இவ்வாறு கவனக்குறைவாக இருந்த மருத்துவ ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோல் காவல் துறையினரும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags : #BIZARRE #HOSPITAL