‘வீட்டு வாசலில் இளம் பெண்ணுக்கு’ ..இளைஞரால் நடந்த கொடூரம்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 07, 2019 02:35 PM

வீட்டின் அருகிலேயே இளம் பெண்ணை கத்தியால் குத்திய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youth attempts to murder a minor girl near to her home

ஹைதராபாத் நகரில் குடும்பத்தினருடன் வசித்து வரும் 17 வயதான இளம் பெண் ஒருவர் வழக்கம் போல நேற்று காலை கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென அப்பெண்ணின் அருகே வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் விழுந்திருந்த அப்பெண் தனது அம்மாவை அழைத்துள்ளார். ஆனால் வீட்டினுள் இருந்ததால் அவருடைய அம்மாவுக்கு அது கேட்கவில்லை.

சிறுது நேரம் கழித்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது தனது மகள் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருப்பதைப் பார்த்து பதறி உடனே அக்கம்பக்கதில் இருப்பவர்கள் உதவியுடன் மருத்துவனையில் சேர்த்துள்ளார் அந்த பெண்ணின் தாயார். இது தொடர்பாக காவல் துறையில் புகாரும் அளித்துள்ளனர்.

பின்னர், காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இளம் பெண்ணை கத்தியால் குத்திய நபர் 19 வயதான பரத் என்பது தெரியவந்துள்ளது. இவர் பல மாதங்களாக இந்த பெண்ணின் பின்னால் சுற்றி தொந்தரவு செய்துள்ளதாக காவல் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  மேலும் பெண்ணின் கழுத்துப் பகுதியில் 17 முறை கடுமையாக கத்தியால் குத்தப்பட்டிருப்பதாலும், கைகளில் கடுமையான கத்திக் காயங்கள் இருப்பதாலும் ரத்த அழுத்தம் சீராக இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள தாமதமாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வீட்டின் அருகிலேயே இளம் பெண் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #HYDERABAD #BIZARRE #WOMEN