‘வாங்கோ..அதிமுக கூட்டணிக்கு வாங்கோ’.. க்ரினீல் சிக்னல் எந்த கட்சிக்கு தெரியுமா?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 07, 2019 02:31 PM

அதிமுக கட்சியுடன் பிற கட்சிகள் கூட்டணி வைப்பது பற்றிய முக்கிய அறிவிப்பினை அமைச்சர் ஜெயக்குமார் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ADMK Welcomes PMK to joins together for Loksabha Election, Jayakumar

‘அதைப்பற்றி பல முறை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இது தேர்தல் காலம்தான். திமுகவைத் தவிர யார் வந்தாலும் எங்களுடன் கூட்டணியில் இணையலாம், இருக்கலாம், இயங்கலாம். ஆனால் எங்களுக்கு யாருமே எதிரி இல்லை. எங்களுக்கு எல்லாமே நண்பர்கள்தான். எங்களின் தலைமை ஏற்று எங்களின் வழிநடத்தலுக்கு ஒப்புக்கொண்டு யார் வேண்டுமானாலும் எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்வதை நாங்கள் ஆமோதிக்கிறோம், வரவேற்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

மேலும் டிடிவி தினகரன் புதிதாக தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையும் திமுகவையும் கூட்டணி லிஸ்டில் சேர்க்காத ஜெயகுமார், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஒரு லெட்டர் பேடு கட்சியாகவே தாம் கருதுவதாக பகிரங்கமாகக் கூறியுள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

முன்னதாக, பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு அதிமுக சம்மதிக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மேற்கண்ட பதிலை கூறிய ஜெயகுமார், எப்போதுமே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், யார் தங்களுடன் கூட்டணியில் இணைய வந்தாலும், தங்களது கட்சி அவர்களை திறந்த மனதோடு வருக வருக என்று வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags : #AIADMK #JAYAKUMAR #AIADMKOFFICIAL #DRRAMADOSS #BATTLEOF2019 #LOKSABHAELECTION2019