டவரிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட கணவர்.. அதிரவைக்கும் காரணம்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 08, 2019 03:12 PM

குடும்பத் தகராறு காரணமாக உயர்மின் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Husband commits suicide falling from tower due to family problem

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள செல்வாய்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று மீண்டும் ரமேஷுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த ரமேஷ், 150 அடி உயரமுள்ள உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனைப் பார்த்தவர்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வேகமாக வந்து ரமேஷுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதனை அடுத்து ரமேஷின் மனைவி மற்றும் குழந்தைகளை போலிஸார் வரவழைத்துள்ளனர். பின்னர் அவர்களை போனில் பேச வைத்து ரமேஷை சமாதனப்படுத்த காவல் துறையினர் முயற்சி செய்துள்ளனர். இது தொடர்ந்து 5 மணி நேரமாக நடந்துள்ளது. ஆனாலும் இதனை கேட்காத ரமேஷ் உயர்மின் கோபுரத்தில் இருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளின் கண் முன்னே குதித்துள்ளார்.

இதில் ரமேஷ் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் ரமேஷின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஆரணி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி,குழந்தைகளின் கண் முன்னே ரமேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #THIRUVANNAMALAI #HUSBAND #SUICIDE #FAMILY ISSUE #BIZARRE