'புது மொபைல் வாங்கி தறியா இல்லையா'?...இளைஞர் செய்த விபரீத செயல்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 04, 2019 10:52 PM

பப்ஜி கேமுக்கு அடிமையான வாலிபர் புது மொபைல் வாங்கி தராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Teen Commits Suicide When Refused New Smartphone to Play PUBG

மும்பையின் நேரு நகரில் உள்ள குர்லா பகுதியில் 18 வயதுடைய வாலிபர் ஒருவர் தனது தாய், அண்ணன், அண்ணி மற்றும் அவர்களது குழந்தையுடன் வசித்து வந்தார்.தீவிர பப்ஜி கேம் ரசிகரான அவர்,நல்ல க்ராஃபிக்ஸில் எந்த வித சிக்கலும் இன்றி இந்த கேமை ஆட நினைத்தார்.இதனால் 37,000 ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த மொபைல் ஒன்றை வாங்கித் தருமாறு தனது அண்ணனிடம் கேட்டுள்ளார்.ஆனால் அதிகபட்சம் 20,000 மதிப்பிலான மொபைலைத்தான் வாங்கித்தர முடியும் என அவரது அண்ணன் கூறியுள்ளார்.இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் விலை உயர்ந்த மொபைலை வாங்கி தர முடியாது என,உறுதியாக இளைஞரின் அண்ணன் கூறினார்.இதனால் கடுமையான கோபத்தில் இருந்த இளைஞரை சமாதானபடுத்த முயன்றும் அது முடியாமல் போக,எப்படியும் காலையில் சரி ஆகி விடுவான் என எண்ணிய இளைஞரின் அண்ணன் தூங்க சென்று விட்டார்.கடும் ஆத்திரத்தில் இருந்த இளைஞர் மீண்டும் பப்ஜி ஆடிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அதிகாலையில் கழிவறை செல்ல எழுந்த அண்ணன் கண்ட காட்சிதான் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.தம்பி பப்ஜி தான் ஆடி கொண்டிருக்கிறான் என நினைத்த அவர்,தம்பி சமையலறையின் ஃபேனில் தூக்கில் தொங்கியதை கண்டு நொறுங்கி போனார்.புது மொபைல் கிடைக்காத விரக்தியில் தான் அவர் தற்கொலை செய்திருக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் பப்ஜி விளையாட்டை தடை செய்யுமாறு 11 வயது மாணவன் ஒருவன, தனது தாயின் உதவியோடு மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #MUMBAI #PUBG #SUICIDE #TEEN #PLAY