‘ஒரே ஸ்டைல்.. ஒரே வசனம்’.. '15 ஆண்களை' திருமணம் செய்த பெண்.. கணவர் குற்றச்சாட்டு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 04, 2019 06:14 PM

விவாகரத்தான ஆண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக மனைவி மீது கணவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளது தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

\'she cheated 15 divorced men in same style\', Husband accuses wife

மன்னார்குடியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் முதல் திருமணம் ஆகி, விவாகரத்தான நிலையில் சிங்கப்பூரில் வேலைபார்த்து வந்தபோது, திருமணத்துக்காக தனது தகவல்களை இணையதள திருமண தகவல் மையங்களில் பதிவு செய்து அதன் மூலம் மகாலட்சுமி என்கிற பெண்ணை 2017-ல் திருமணம் செய்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த தந்தையை இழந்த மகாலட்சுமி, முன்னதாக திருமணமானவர் என்றும், திருமணமாகி கர்ப்பமாகி இருந்தபோது தன் முதல் கணவர் வயிற்றில் எட்டி உதைத்ததால் குழந்தை கருவிலே அழிந்துவிட்டதாகவும் இதனை அடுத்து திருச்சிக்கு இடம் பெயர்ந்து, தனது தாயுடன் அங்கு தங்கி வாழ்ந்து வந்ததாகவும் உதயகுமாரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் பரவாயில்லை என்று மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டு, மகாலட்சுமியின் தாய்க்கும் தன் வீட்டில் இடம் கொடுத்து உதயகுமார் வாழ்ந்து வந்துள்ளார். ஒருமுறை உதயகுமாரிடம் மகாலட்சுமியின் தாயார், உதயகுமாரின் பூர்வ சொத்துகள் பற்றியும் தற்போது இருக்கும் சொத்துவிபரங்கள், நகை விபரங்கள் பற்றி கேட்டுள்ளார். அதன் பிறகு உதயகுமார் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். பிறகொருநாள் மகாலட்சுமியோ, தான் கருவுற்றிருப்பதாக உதயகுமாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட உதயகுமார் இனியும் வெளிநாட்டு வாழ்க்கை வேண்டாம் என்று மனைவியுடன் வந்து தங்கியுள்ளார்.  ஆனால் ஒருநாள் உதயகுமார் வீட்டில் இல்லாதபோது வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டு மகாலட்சுமியும் அவரது தாயாரும் காணாமல் போயுள்ளனர்.

போன் செய்தால் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்த நிலையில் உதயகுமார் போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆனால் ஒருநாள் உதயகுமாருக்கு போன் செய்த மகாலட்சுமி, தன் அம்மா பேச்சை கேட்டு இப்படி செய்துவிட்டதாகவும் கர்ப்பிணியாக தான் கஷ்டப்படுவதாகவும் குறிப்பிட்டு , குழந்தையை நல்லபடியாக பெற்றெடுத்துவிட்டு தான் மீண்டும் வருவதாகக் கூறி மீண்டும் 85 ஆயிரம் கேட்டு வாங்கி உதயகுமாரை 2வது முறையாக ஏமாற்றியுள்ளார்.

அதன் பிறகு இணையத்தில் தேடிய உதயகுமாருக்கு, மகாலட்சுமி விவாகரத்தான ஆண்களை குறிவைத்து திருமணம் செய்து பணம் பறிப்பவர் என்றும், 15க்கும் மேற்பட்டவர்களுடன் திருமண கோலத்தில் நின்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆதாரங்களை சேகரித்துள்ளார். அதோடு உதயகுமாரின் குழந்தையை மகாலட்சுமி கருவிலேயே கலைத்துவிட்டு, உதயகுமார் எட்டி உதைத்துவிட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதே சமயம் உதயகுமார், தனது குழந்தையை மகாலட்சுமி மருத்துவமனை சென்று கலைத்ததற்கான ஆதாரங்களையும் கண்டறிந்து சேகரித்துள்ளதாவும் கணவர் எட்டி உதைத்து கரு கலைந்த வசனத்தை டெம்ப்ளேட்டாக தான் ஏமாற்றும் எல்லாருக்கும் மகாலட்சுமி கூறியதாகவும் வார இதழான விகடனுக்கு பேட்டி அளித்துள்ளார். ஆனால் மகாலட்சுமியின் தரப்போ இதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்துள்ளதாக விகடனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : #HUSBAND #WIFE #DIVORCED #CHEATING