'வாய்பேச முடியாத அப்பா'...குட்டி மகளின் மனதை உருக்கும் செயல்!...வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 13, 2019 02:51 PM

அன்பிற்கு மொழி இல்லை என்ற கூற்று உண்டு.நமக்கு மிகவும் பிடித்தவர்களிடம் உரையாடுவதற்கு மொழி எப்போதுமே ஒரு தடையாக இருந்தது இல்லை.வாய் பேசமுடியாத,காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்கள் என பலரும் தங்கள் விருப்பமானவர்களிடம் உரையாடி கொண்டு தான் இருக்கிறார்கள்.அவர்களின் மொழி அவர்களின் நெருக்கமானவர்களுக்கு புரியத்தான் செய்கிறது.அந்த வகையில் ட்விட்டரில் நம் மனதை எல்லாம் உருக செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

little girl using sign language to communicate with her dad

வாய்பேச முடியாத தந்தை தனது சிறு வயது மகளிடம் அன்பாக உரையாடும் வீடியோ பார்க்கும் அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.வாய்பேச முடியாத தனது தந்தை என்ன கூறுகிறார் என்பதை துல்லியமாக கணித்து,அதற்கு அழகாக செய்கையில் பதில் சொல்லும் சிறுமியை காணும்போது தான் தெரிகிறது,அன்பிற்கு மொழி என்பது தடையில்லை.தந்தை மகள் உறவினை சொல்வதற்கு வார்த்தைகளும் இல்லை.

Tags : #TWITTER #SIGN LANGUAGE #ADORABLE