கடைசில 'இவரையும்' நீங்க விட்டு வைக்கலயா?...இணையத்தில் ஹிட் அடித்திருக்கும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 12, 2019 10:52 AM

தனது ட்விட் மூலம் ட்விட்டரை கலக்கி வருபவர் விரேந்தர் சேவாக்.அவரது கிண்டலான ட்விட்டை படிப்பதற்கே தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.இந்நிலையில் தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்காக நடித்த விளம்பரம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Virender Sehwag Turns Babysitter In New TV Advertisement video

வரவிருக்கும் இந்திய,ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் தொடருக்கான விளம்பரத்தில் விரேந்தர் சேவாக் நடித்துள்ளார்.5 ஒரு நாள் போட்டி மற்றும்,2 T20 போட்டிகளுக்காக இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது.மிகவும் கியூடாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பரத்தில்,ஆஸ்திரேலிய குழந்தைகள் பலர் சேவாக்குடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த விளம்பரத்தில் சேவாக், பேபி சிட்டராக வலம்வருவதாக போல் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரின் போதுதான் பேபிசிட்டர் ட்ரெண்டானது.மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது,ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன், இந்திய கீப்பர் ரிஷப் பண்ட்டை தனது குழந்தைகளை பார்த்துக் கொள்ள பேபிசிட்டராகிராயா என்று வம்பிழுத்தார்.அவரின் பேச்சு ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியிருந்தது.பின்னர் பெய்னின் மனைவியுடன் அவரின் குழந்தைகளை ரிஷப் பன்ட் வைத்திருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

இது போன்ற சுவாரசியமான சம்பவங்களை மையமாக வைத்து இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது.தற்போது சேவாக் நடித்துள்ள விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #VIRENDHARSHEWAG #CRICKET #BCCI #TWITTER #BABYSITTER #INDIA-AUSTRALIA