‘இவர் ஒரு ஆரோக்கியமான தலைவலி’..இந்திய கிரிக்கெட் வீரர் குறித்து பேசிய தேர்வு குழுத் தலைவர்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 11, 2019 03:09 PM

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட், விஜய் சங்கர், ரஹானே ஆகியோர் இடம்பிடிக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர்  எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

Pant ‘Healthy Headache’, Says Chief Selector Ahead Of World Cup

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 30 -ஆம் தேதியில் இருந்து  நடைபெற இருக்கிறது. இதற்காக பல்வேறு நாட்டு அணிகள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சாதனைகளை நிகழ்த்தியது. இதில் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு சில இளம் வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், உலகக் கோப்பைப் போட்டிக்கான 15 பேர் கொண்ட உத்தேச அணியை தோராயமாக முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்திய அணியின் இளம் வீரர்களின் முந்தைய ஆட்டங்கள் குறித்தும் உலகக் கோப்பையில் அவர்களின் இடம் குறித்தும் பேசியுள்ளார்.

அதில் எம்.எஸ்.கே.பிரசாத் பேசியதாவது, ‘உலகக் கோப்பைக்கான வீரர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட்டை கவனத்தில் வைத்துள்ளோம், கடந்த ஒரு வருடமாக டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். ரிஷப் பண்ட் ஒரு ‘ஆரோக்கியமான தலைவலி’ என இளம் வீரர் ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ளார்.

மேலும்,‘ரஹானே உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடி வருகிறார். அதேபோல் விஜய் சங்கரும் கிடைக்கு வாய்ப்புகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இவர்கள் இருவரும் கவனத்தில் உள்ளனர்’ என இந்திய அணியின் தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார்.

Tags : #TEAMINDIA #WORLDCUP2019 #ICC #BCCI #RISHABHPANT #VIJAYSHANKAR