போதை பொருள் வைத்திருந்ததாக முன்னாள் "பிக் பாஸ்" போட்டியாளர் கைது!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 23, 2018 06:11 PM
Bigg Boss Contestant Ajaz Khan Arrested For Allegedly Possessing Drugs

பாலிவுட் நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான அஜாஸ் கான்,போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

 

பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான அஜாஸ்,மும்பையின் நவி பகுதியில் உள்ள ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார்.அவர் கைது செய்யப்படும் போது "எக்ஸ்டஸி" என்னும் போதை மாத்திரைகளை அவர் வைத்திருந்ததாக போதை பொருள் தடுப்பு காவல்துறையினர் தெரிவித்தார்கள்.இவ்வகையான போதை மாத்திரைகள் இரவு விடுதிகளில் நடக்கும் பார்ட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள்.அஜாஸ் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறை அல்ல.

 

இரண்டு வருடங்களுக்கு முன்பு  அழகுகலை நிபுணரான பெண் ஒருவருக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதாக கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #DRUGS #MUMBAI #BIGG BOSS CONTESTANT #AJAZ KHAN