மின்சார ரயிலிலிருந்து தவறி விழுந்த இளம்பெண் :நொடிப்பொழுதில் காப்பாற்றிய சக பயணிகள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 04, 2018 11:40 AM
Woman Escapes Death After Almost Falling From Mumbai Local train

மும்பையின் மின்சார ரயிலில் அவ்வப்போது இளைஞர்கள் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் உலா வருவது வழக்கம்.இந்நிலையில் பெண் ஒருவர் ஆபத்தான வகையில் பயணம் செய்த போது தவறிவிழுந்து உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

 

மும்பையில் மின்சார ரயிலில் படிக்கட்டில் உள்ள தடுப்புக்கம்பியை பிடித்து தொங்கியபடி 17 வயது பெண் ஒருவர் பயணித்துள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறிய அவர், ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதைப் பார்த்த சக பயணிகள், தடுப்புக் கம்பியின் அடிப்பகுதியை பற்றியவாறு இருந்த அப்பெண்ணை நொடிப்பொழுதில் பாதுகாப்பாக மீட்டனர். இளம்பெண் ரயிலில் இருந்து விழுந்த நேரத்தில் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் மற்றொரு மின்சார ரயில் வேகமாக செல்கிறது.

 

நொடிப்பொழுதில் மிகவும் சாதுரியமாக செயல்பட்ட சக பயணிகளால் அந்த பெண் காப்பாற்றப்பட்டார்.அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #MUMBAI #TRAIN #MUMBAI LOCAL TRAIN