'பெற்ற தாய் இறந்தபோதும்' மனம் தளராமல் மேட்சை முடித்து கொடுத்த வீரர்..கண்கலங்கிய ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 04, 2019 03:22 PM

தாய் இறந்த செய்தி அறிந்தும் நாட்டிற்காக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரின் செயல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Alzarri Joseph\'s mum died during play, and he went after the match

இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முன்னதாக இங்கிலாந்திற்கு எதிராக நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 -வது டெஸ்ட் ஆண்டிகுவா என்னும் இடத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 187 ரன்களுக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 306 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2 -வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டியின் 3 -வது நாள் ஆட்டத்தின்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பின் தாய் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மனம் தளராமல், நாட்டிற்காக 4 -வது நாள் ஆட்டத்தில் பங்கேற்று 4 விக்கெட்டுகளை ஜோசப் வீழ்த்தியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பின் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது. 

Tags : #ALZARRIJOSEPH #WIVENG #TEST #MOTHER #DEATH