மீண்டும் ஒரு கொடூரம்: 9 வயது சிறுவனை பலாத்காரம் செய்த பெண்.. பாக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 11, 2019 11:17 PM

9 வயது சிறுவனை மீண்டும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேரளத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

women rapes 9 year old minor boy, booked under POCSO Act

சமீபத்தில் எர்ணாகுளத்தில் 9 வயது சிறுவனை பெண் ஒருவர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது அதேபோன்று கேரளாவின் தேனிப்பள்ளம் பகுதியில் 9 வயது சிறுவனை உறவுக்கார பெண்ணே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்துள்ளது.

உறவுக்கார பெண்ணின் பாலியல் வேட்கையால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் போன வாரம் தேனிப்பள்ளம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது தான் மேற்கண்ட இந்த உண்மை மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருத்துவரின் அறிவுறுத்தலின்படி போலீஸாரும், குழந்தைகள் காப்பக அதிகாரிகளும் சேர்ந்து இந்த விவகாரத்தை விசாரிக்கத் தொடங்கினர்.

இதுகுறித்து குழந்தைகள் காப்பக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஓராண்டுக்கு மேலாக சிறுவன் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி  மனரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் இதற்கு காரணமானவர் அச்சிறுவனின் உறவுக்கார பெண் என தெரியவந்துள்ளது.

இதனை உறுதி செய்தபிறகு, குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார்  தீவிர முதற்கட்ட விசாரணையில், முன்னதாக அந்த பெண்ணுக்கும் சிறுவனின் குடும்பத்திற்கும் ஏற்கெனவே பிரச்சனைகள் இருந்ததை கண்டறிந்துள்ளனர். இதனை அடுத்து அப்பெண் மீது பாக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : #SEXUALABUSE #RAPE #CRIME #MURDER #KERALA