கடந்த வருடம் காணாமல் போன பள்ளி மாணவிக்கு, திரைப்பட பாணியில் நேர்ந்த கொடூரம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 11, 2019 09:03 PM

கடந்த ஆண்டு காணாமல் போன மாணவி ஒருவர் மீண்டும் எலும்புக் கூடாக கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்களின் மத்தியில் பெருத்த அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

School girl missed and her Skeleton found after one year - TN bizarre

திருவள்ளூர் அருகே வசித்துவரும் சுப்பிரமணி என்பவரது மகள் சரிதா, அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிக்குச் சென்றவர்தான். ஆனால் வீடு திரும்பவில்லை. பெண் பிள்ளை வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோருக்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் பல இடங்களில் தேடி அலைந்து நொந்துபோயுள்ளனர்.

பின்னர் சரிதாவின் அப்பா சுப்பிரமணி, அருகில் இருந்த பொதட்டூர்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். ஆனால் சில நாட்கள் தேடிய காவல் துறையினர் பின்னர் தேடுவதை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில்தான், அதே பகுதியைச் சேர்ந்த கீச்சளம் கிராமத்தின் ஏரிப்பகுதியில் கரும்புத் தோட்டத்தின் அருகே மனித எலும்புக்கூடு ஒன்றை நேற்று சுரேஷ் என்கிற விவசாயி பார்த்ததோடு, பொதட்டூர்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்துள்ளார்.

போலீஸார் நேரில் சென்று மேற்கொண்ட பரிசோதனைகளுக்கு பிறகு அது கடந்த வருடம் காணாமல் போன சரிதாவின் எலும்புக்கூடு என்பதை கண்டறிந்துள்ளனர். திருத்தணி வருவாய் கோட்டாட்சியரும் இந்த தகவல் அறிந்து, மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்க உத்தரவிட்டுள்ளதோடு தானும் விசாரித்து வருகிறார்.

திரைப்பட பாணியில் இளம் மாணவி கடத்தப்பட்டு எலும்புக்கூடாக கிடைத்திருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SCHOOLSTUDENT #BIZARRE #MISSING #SCHOOLGIRL #MURDER #CRIME