திருமணமாகி 3 நிமிடத்தில் கணவரை டைவர்ஸ் செய்த மனைவி.. இப்படி ஒரு காரணமா?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 11, 2019 07:27 PM

உலகின் காஸ்ட்லியான திருமணத்தை பார்த்திருப்போம். உலகில் நீண்ட நேரம், நீண்ட நாட்கள் நடந்த திருமணத்தை பார்த்திருப்போம்.

couple ended up calling it quits in just three minutes bizarre reason

உலகிலேயே மிக பிரம்மாண்டமான கூட்டத்துடன் நடைபெற்ற திருமணத்தைப் பார்த்திருப்போம். உலகின் மிக உயரமான, மிக குளிரான, ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் நடக்கும் வெவ்வேறு திருமணங்களைப் பற்றி அறிந்திருப்போம். திருமணம் என்பது மறக்க முடியாத முக்கியமான தருணம் என்பதால், அதனை தங்களது நினைவுப் பேழைக்குள் பத்திரப்படுத்தி வைப்பதற்காக நடத்தப்படும் திருமணங்கள் அவை.

சொர்க்கத்தில் நிச்சயமாவதாக பலரால் நம்பப்படும் திருமணங்கள் பலவும் நடந்து முடிந்த ஒரு வருடத்தில், ஒரு வாரத்தில், ஒருநாளில், சில மணி நேரங்களுக்குள் விவாகரத்தான சம்பவங்களும் உண்டு. ஆனால் திருமணம் முடிந்த 3 நிமிடத்தில் மணமகனும் மணமகளும் விவாகரத்து செய்துகொண்டுள்ள கொடுமையான சம்பவம் அரங்கேறியுள்ளது பலரிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குவைத்தில் நடந்த இந்த ரிஜிஸ்டர் திருமணத்தின் போது, கையெழுத்திட்டுவிட்டு கணவன் மனைவியாகி, தம்பதிகள் இருவரும் வெளியே வரும்போது மனைவியாகிய மணப்பெண் தடுக்கி விழுந்துள்ளார். ஆனால் தவறிப்போய் விழுந்த மனைவிக்கு பதறிப்போய் சென்று உதவாமல், சிரித்துக்கொண்டு ஸ்டுப்பிட் என்று சொல்லியிருக்கிறார் அந்த கணவர்.

இதைக் கேட்ட அந்த மனைவி தன் சுயமரியாதைக்கும் மாண்புக்கும் பங்கம் உண்டாக்கிய தனது ‘3 நிமிட கணவரை’ விவாகரத்து செய்ய முடிவு செய்து உடனே ரிஜிஸ்டாரின் அறைக்குச் சென்று தனது திருமண பதிவை கேன்சல் செய்யுமாறு கூறியுள்ளார்.

அந்த ரிஜிஸ்டாரும் உடனே ஒப்புக்கொண்டு, சற்று முன்னரே ஒருவரின் மனைவியாக மாறிய, அந்த பெண்ணின் திருமண பதிவை ரத்து செய்து, மீண்டும் மணப்பெண் அங்கீகாரத்தை அப்பெண்ணுக்கு தந்துள்ளார்.  மணப்பெண்ணின் இந்த முடிவுக்கும், மாப்பிள்ளையின் செயலுக்கும் ஆதரவு எதிர்ப்பு என இருவேறுவிதமான கருத்துக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.

இதேபோல் சில நாட்களுக்கு முன்பாக திருமணமான சில மணி நேரங்களிலேயே பந்தியில் உணவுண்ண அமர்ந்த மணமக்களுக்குள் சண்டை வந்து சாப்பாட்டை தூக்கி ஒருவர் மீது ஒருவர் வீசி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களும் அப்போதே தங்களது விவாகரத்தினை அறிவித்தனர்.

Tags : #MARRIAGE #BRIDE #GROOM #BIZARRE #DIVORCE