ஒரு 'பிளைட்'ட கூட நிம்மதியா 'பார்க்கிங்' பண்ண முடியலையே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 23, 2018 04:57 PM
Two teen boys steal Air Plane in America

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தை 14 வயது சிறுவர்கள் இருவர் திருடிச்சென்ற சம்பவம், அமெரிக்காவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து அமெரிக்காவின் உத்தா மாகாணத்தைச் சேர்ந்த போலீசார் தங்கள் பேஸ்புக் பதிவில்,''நேற்று முன்தினம் இங்குள்ள உள்நாட்டு விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது டிராக்டரில் வந்த இரு சிறுவர்கள் விமானத்தை எடுத்து இயக்க ஆரம்பித்தனர். இதைப்பார்த்த விமான நிலைய அதிகாரிகள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்,'' என தெரிவித்திருந்தனர்.

 

இதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிறுவர்களிடம் பேசி, போலீசார் அந்த விமானத்தை தரையிறக்கி  சிறுவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய வகை விமானம் என்பதால் சிறுவர்களால் உயரப் பறக்க முடியவில்லை. தாழ்வாகவே பறக்க முடிந்துள்ளது எனக் கூறும் போலீஸ் அதிகாரிகள், விமானத்தை இயக்க சிறுவர்கள் எப்படிக் கற்றுக்கொண்டார்கள் என்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #FLIGHT #AMERICA