BGM 2019 All Banner

‘ஹாரிபாட்டர்’ புகழ் எம்மா வாட்சன் இல்லை இது; 9 வயது சிறுமியின் வைரல் புகைப்படம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 20, 2018 08:31 PM
This 9 yr Old Girl Emmie Allan looks like younger actress Emma Watson

ஹாரிபாட்டர் தொடர் சீரிஸ்களை பார்த்திருப்போம். ஹாலிவுட்டில் ஜே.கே.ரௌவ்லிங் எழுதிய தொடர் கதைகளின் அணிவகுப்பு உலகம் முழுவதும் ஹிட் ஆன, பிக்‌ஷனல் சூப்பர் நேச்சரல் மனிதர்களை பற்றிய படங்களுள் ஒன்று. 

 

இந்த தொடர் பட சீரிஸ்களுக்கு சிறு வயது முதலே பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதில் முதன்மை பெண் கதாபாத்திரமாக சிறு வயது முதல் கடைசி சீரிஸ் வரை நடித்தவர்தான் ஹாலிவுட் புகழ் பெற்ற நடிகை எம்மா வாட்சன். 

 

இந்த நிலையில் அவரை ஒத்த தோற்றத்தை உடைய 9 வயது சிறுமியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பற்றி இந்த சிறுமியின் அம்மா கூறும்போது, ‘எம்மா வாட்சனை போல் தன் மகள் இருக்கிறாள் என்பதை உணர 3 வருடங்கள் ஆனதாகவும், எம்மா வாட்சனை ஒத்த தோற்றம் கொண்டதால் சிறுமிக்கு எம்மி ஆலன் என்று பெயர் வைத்ததாகவும் கூறுபவர், பல நண்பர்கள் ஹாரிபாட்டரில் வரும் எம்மா வாட்சனின் கதாபாத்திர பெயரான ஹெர்மாயின் கிரங்கர் என்கிற பெயரையே சொல்லி அழைக்கத் தொடங்கியதாகவும் கூறுகிறார். 

 

அதுமட்டுமல்லாமல், எம்மா வாட்சன், விரைவில் இயக்குனராக விரும்புவதாகவும், அவ்வாறு ஆனால் தன்னுடைய சுய வரலாற்று கதையை படமாக்க விரும்புவதாகவும், ஒரு பேச்சு நிலவுகிறது. ஒருவேளை அது உண்மையாக இருந்தால், ‘தன் மகள் எம்மியையே நடிக்க வைக்க வாய்ப்பிருப்பதாகவும் தன் மகள் எதிர்காலத்தில் மாடல் மற்றும் நடிகையாவதற்கும் வாய்ப்பிருப்பதாகவும் நெகிழ்கிறார். 

Tags : #VIRAL #BUZZ #LOOKALIKE #CHILDHOODEMMAWATSON #HERMIONE GRANGER #EMMA WATSON #EMMIE ALLAN #JK ROWLING #HARRY POTTER #ACTRESS #HUMANSIMILAR #LIKENESS