'ரசிகருக்கு இன்ப அதிர்ச்சியளித்த விஜய்'.. குவியும் பாராட்டுக்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 02, 2018 09:56 PM
Thalapathy Vijay surprises Nasser\'s son Faizal on his Birthday

தனது தீவிர ரசிகரின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று, நடிகர் விஜய் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

 

விபத்தில் சிக்கிய நடிகர் நாசரின் மகன் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார். இவர் விஜய்யின் தீவிர ரசிகர். இந்தநிலையில் நேற்று அவரின் பிறந்தநாள் வர, அவரது வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் விஜய் இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

 

இப்புகைப்படங்களை நாசரின் மனைவி கமீலா நாசர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “விஜய் அண்ணாவுடன் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற உன் கனவு நனவாகியுள்ளதே” என்று தெரிவித்திருக்கிறார்.

 

தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Tags : #VIJAY #THALAPATHY63