'போலீசையும் சாட்சிக்காரனையும் கொன்னுருவேன்' சவால் விட்ட ரவுடி !

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 22, 2018 06:00 PM
Rowdy threatening police officer in Dindigul

திண்டுக்கல்லில் காவல்துறையினரால் கைது செய்து கட்டிவைக்கப்பட்ட ரவுடி பொதுமக்கள் முன்னிலையில் காவல்துறையினருக்கு கொலை  மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய காவலரான பாண்டி என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது பாண்டிமுனீஸ்வரன் கோவில் அருகே அதே பகுதியை சேர்ந்த ராகவன் மற்றும் ரங்கன் என்ற இருவரும் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்கள்.அப்போது அங்கு ரோந்து வந்த பாண்டி பொது இடத்தில் மது அருந்துவது தவறு எனவே இருவரும் வீட்டிற்கு செல்லுங்கள் என கண்டித்துள்ளார்.

 

இதனால் கோபமடைந்த இருவரும் காவலர் பாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து காவலர் பாண்டியை தாக்க தொடங்கினார்கள்.சுதாரித்து கொண்ட பாண்டி பொதுமக்கள் உதவியுடன் ராகவனை பிடித்து கட்டி வைத்தார்கள். அவருடன் இருந்த ரங்கன் தப்பியோடிவிட்டார்.கட்டி வைத்த பின்பும் ராகவன் பொதுமக்கள் முன்னிலையில் போலீசாருக்கு கொலைமிரட்டல் விடுத்தார்.

 

"தான்  சிறைக்கு சென்று வந்த பிறகு  போலீசாரை  கொலை செய்துவிடுவதாகவும் ,எனக்கு எதிராக யாரும் சாட்சி சொல்ல வரமாட்டார்கள் என்றும்  அப்படி சாட்சி சொல்ல வந்தால் அவர்களையும் கொலை செய்து விடுவதாகவும்,பொதுமக்கள் முன்னிலையில் ராகவன் மிரட்டல் விடுத்தார்.இந்நிலையில் தப்பியோடிய ரங்கனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags : #POLICE #ROWDY #DINDIGUL