நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பாலியல் வழக்கில்...பிஷப்பைக் கைது செய்தது காவல்துறை!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 21, 2018 11:07 PM
Kerala Nun Case: Bishop Franco Mulakkal arrested

நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் பிராங்கோ முளய்க்கல்  இன்று கைது செய்யப்பட்டார்.

 

கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் பிராங்கோ முளய்க்கல் 2014-2016 வரை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். எனினும் இந்த வழக்கில் பிஷப் கைது செய்யப்படவில்லை.

 

தொடர்ந்து 14 நாட்களாக கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் பிஷப்பைக் கைது செய்யக்கோரி கொச்சியில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.இதற்கிடையில் தனது பிஷப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு   ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற பிஷப் முயற்சிசெய்தார்.ஆனால் கோர்ட் அவருக்கு முன்ஜாமீன் வழங்கவில்லை.

 

இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக பிஷப்பை விசாரணை செய்த கோட்டயம் போலீசார் இன்று அவரைக் கைது செய்துள்ளனர். மேலும்,இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கன்னியாஸ்திரி மற்றும் பிஷப் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags : #KERALA #POLICE #BISHOP