‘எங்க டார்கெட் இந்த எலக்‌ஷன் இல்ல..அந்த எலக்‌ஷன்தான்’.. ரஜினியின் அனல் பறக்கும் அறிக்கை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 17, 2019 11:59 AM

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை நடிகரும் அரசியல்வாதியுமான ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

Our Target is not Parliamentary election, says rajinikanth

இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தங்களது இலக்கு என்று கூறியுள்ளார். நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் தன்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது என்று உறுதியாகக் கூறியுள்ளார் ரஜினிகாந்த். 

அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் தன்னுடைய படமோ, தன் மன்றத்தின் கொடியோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ பிரச்சாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மேலும் ‘தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர் என்பதால் வரவிருக்கும் தேர்தலில், மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : #RAJINIKANTH #RAJINIMAKKALMANDRAM #ELECTIONS2019