'போதும்..போதும். இந்த காட்டுமிராண்டி செயல்களுக்கெல்லாம்..'.. தாக்குதல் பற்றி ரஜினி ஆவேசம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 15, 2019 08:00 PM

ஜம்மு- காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதலுக்கு 40க்கும் மேற்பட்ட இந்திய துணை ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

\'Enough is Enought\', Rajini condemns On Pulwama Terror Attack

இந்த தாக்குதலுக்கு பல அரசியல் தலைவர்களும், கிரிக்கெட் வீரர்களும், பொதுமக்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் அரசியலாளருமான ரஜினிகாந்த் தன்னுடைய கண்டனத்தை மிகவும் வலுவாகவும் காட்டமாகவும் பதிவு செய்துள்ளார். அதில், ‘காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த இந்த மன்னிக்க முடியாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். போதும்-போதும்’ என்று தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

அதோடு, ‘இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு ஒரு முடிவு கட்டும்  நேரம் வந்துவிட்டது’ என்றும் காட்டமாக பதிவு செய்து நடந்த தாக்குதலை நடிகர் ரஜினிகாந்த் விமர்சித்துள்ளார்.

மேலும் தாக்குதலில் காயமடைந்த வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் தன் இதயப்பூர்வமான ஆறுதலைக் கூறுவதாகவும், தாக்குதலில் பலியான வீரர்களின் பிரேதாத்மா ஷாந்தி அடையட்டும் என்றும் இரக்கத்துடன் பதிவிட்டுள்ளார். ரஜினியின் இந்த அறிக்கையை, அவரது அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

Tags : #JAWANS #PULWAMATERRORATTACK #CRPF #RAJINIKANTH