‘ராணுவ உடையில் தந்தைக்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய மகன்’..கண்கலங்க வைத்த காட்சி!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 16, 2019 10:08 PM

புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரருக்கு அவரது மகன் ராணுவ  உடையில் வந்து மரியாதை செலுத்துயது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Son kissed his father in military dress

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் சிவச்சந்திரன் மற்றும் சுப்பிரமணியன் உடல்கள் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதனை அடுத்து சுப்பிரமணியனின் உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள் மற்றும் முப்படை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சிவச்சந்திரன் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

பின்னர் அங்கிருந்து சிவச்சந்திரன் சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் சிவச்சந்திரன் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கார்குடி கிராமத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சிவச்சந்திரன் உடல் வைக்கப்பட்டது. அதில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது சிவச்சந்திரனின் தந்தை ராணுவ உடையணிந்து வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதேபோல் சிவச்சந்திரனின் ஒரு வயது மகன் மொட்டை அடித்து ராணுவ ஆடை அணிந்தவாறு வந்து தனது தந்தைக்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Tags : #PULWAMATERRORISTATTACK #RIPBRAVEHEARTS #SUBRAMANIYAN #SIVACHANDRAN