‘பப்ஜி விளையாடனும் சார்ஜரை கொடுக்க முடியுமா முடியாதா?’..இளைஞர் செய்த கொடூர செயல்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 16, 2019 08:54 PM

பப்ஜி விளையாடிக் கொண்டிருக்கும் போது செல்போனில் சார்ஜ் தீர்ந்து போன கோபத்தில் சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட நபரை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

pubg addicted man stabs sister\'s fiance for mobile charger

இப்போதைய டிரெண்டிங் கேமான பப்ஜியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடி வருகின்றனர். ஆனால் குழந்தைகள் படிக்கும் நேரத்தைவிட பப்ஜி விளையாடவே அதிக நேரம் செலவளிக்கின்றனர், இதனால் அவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது என பெற்றோர்கள் இந்த பப்ஜி கேமுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பப்ஜி கேமிற்காக இளைஞர் ஒருவர் தனது சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட நபரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் என்கிற பகுதியை சேர்ந்தவர் ரஜினிஷ் ராஞ்பார். இவர் தனது செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென சார்ஜ் தீர்ந்து போயுள்ளது. இதனை அடுத்து விளையாட்டை மீண்டும் தொடர வேண்டும் என்கிற அவசரத்தில் செல்போன் சார்ஜரைத் தேடியுள்ளார்.

அப்போது அவரின் செல்போன் சார்ஜ் வயர் அறுந்துகிடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரஜினிஷ், தனது சகோதரின் மேல் சந்தேகமடைந்துள்ளார். அப்போது ரஜினிஷின் சகோதரி தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஓம் பாவ்ட்கர் என்பவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

கோபத்துடன் சென்ற ரஜினிஷ் தனது சகோதரியிடம் சார்ஜ் வயரை அறுத்ததாக கூறி சண்டையிட்டுள்ளார். இதை அருகில் இருந்த ஓம் தடுத்துள்ளார். இது கடைசில் கைகலப்பில் முடிய ஆத்திரத்தில் அருகில் இருந்த கத்தியால் ஓம் பாவ்ட்கரை அந்த இளைஞர் கத்தியால் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ஓமை உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனை அடுத்து ரஜினிஷின் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #PUBG #MAHARASHTRA #BIZARRE