‘தாயில்லா குழந்தைகளுக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்’..பதறவைக்கும் காட்சிகள்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 15, 2019 04:52 PM

குடிபோதையில் தாயில்லா குழந்தைகளை தந்தை சாட்டையால் அடிக்கும் காட்சிகள்  அனைவரையும் பதற வைத்துள்ளது.

Drunken father beats his childs in villupuram dist

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சிக்கு அருகே வெங்கடேசன் என்பவர் தனது 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெங்கடேசனின் மனைவி இறந்துள்ளார்.

இந்நிலையில் தாயில்லா குழந்தைகளை வெங்கடேசன் தினமும் குடித்துவிட்டு அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து  கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் படித்துக் கொண்டிருந்த குழந்தைகளை வெங்கடேசன் சாட்டையால் அடித்துள்ளார்.

இதனால் குழந்தைகள் வலிதாங்கமுடியாமல் அலறியுள்ளனர். இதனை அடுத்து குழந்தைகள் கத்தும் சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் மக்கள் குடிபோதையில் இருந்த தந்தையிடம் இருந்து குழந்தைகளை மீட்டுள்ளனர்.

இதனை அடுத்து இது தொடர்பாக குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த குழந்தைகள் நல அமைப்பினர் குழந்தைகளை மீட்டு தங்களது பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

Tags : #FATHER #CHILDREN #BIZARRE