நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 12, 2019 12:26 PM

டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தால் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

massive fire accident at Hotel Arpit Palace in Karol Bagh

டெல்லியில் கரோல் பாக் என்னும் பகுதியில் அர்பித் பேலஸ் என்கிற நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உடனே தீ அணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, வேகமாக வந்த தீ அணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணியில் சுமார் 20 -க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். ஆனாலும் துரதிருஷ்டவசமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் உயிரிழந்தவர்களுள் பெண்கள், குழந்தைகளும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் தீயில் சிக்கி உயிரழந்தவர்களை விட மூச்சுத் திணறலால் உயிரிழந்தவர்களே அதிகம் என தீயணைப்புத் துறை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஓட்டலில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : #DELHIHOTELFIRE #BIZARRE #DEATH