முதலிரவில், 70 வயது மணமகனை சாமர்த்தியமாக ஏமாற்றிய 28 வயது மனைவி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 14, 2019 11:03 PM

28 வயது இளம்பெண் 70 வயது மணமகனை திருமணம் செய்துகொண்டு அவரை முதலிரவில் ஏமாற்றிய சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

28 yrs old bride cheats 70 yr old groom after marrying him

பாகிஸ்தானின் சர்கோதா மாகாணத்தைச் சேர்ந்த முகமது முஸ்தபா 70 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி 28 வயதான இளம்பெண் நஜ்மா பிபி என்பவரை மறுமணமும் செய்துகொண்டார். இந்த திருமணத்தை முன்னிட்டு நஜ்மா பிபிக்கு ரூ.70,000 பணம் கொடுத்ததுடன், தனது முன்னாள் மனைவியின் நகைகளையும் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு மணமக்கள் இருவரும் முதலிரவுக்கு ஆயத்தமான நிலையில், முஸ்தபா குடிக்கவிருந்த பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார் மணமகள் பிபி. இவை எதுவும் அறியாத முஸ்தபா அந்த பாலினை குடித்துவிட்டு மயங்கியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் சாமர்த்தியமாக செயல்பட்ட நஜ்மா பிபி அந்த வீட்டில் இருந்த பணம், நகை மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்கள் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு இரவோடு இரவாக ஓட்டம் பிடித்துள்ளார்.

தூக்க மாத்திரையின் வீரியம் குறைந்து காலையில் கண்விழித்து பார்த்த போது 70 வயது மணமகன் முஸ்தபாவிற்கு நடந்தவை அனைத்தும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்துள்ளது. இதனையடுத்து 28 வயதான தனது இரண்டாவது மனைவி பிபி ஒரு குழுவுடன் சேர்ந்து தன்னை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாக போலீஸாரிடம் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

Tags : #CHEAT #BRIDE #GROOM #BIZARRE