'நாங்க திரும்பி வந்துட்டோம்ன்னு சொல்லு'...இமாலய வித்தியாசத்தில் இங்கிலாந்தை கதறவிட்ட இந்தியா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 22, 2018 04:01 PM
INDVSENG: India win the 3rd Test by 203 runs

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது. முக்கியமான கட்டத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றியை பும்ரா உறுதி செய்தார். இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது 2-1 என்ற நிலையில் உள்ளது.

 

இந்த வெற்றியினால் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் வென்ற 6-வது கேப்டன் என்ற பெருமை விராட் கோலிக்கு கிடைத்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து மண்ணில் அஜித் வடகேர், கபில்தேவ், கங்குலி, ராகுல் டிராவிட், டோனி ஆகியோர் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #VIRATKOHLI #HARDIKPANDYA #ENGLAND