மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 03, 2018 11:43 AM
144 to be imposed in and around sabarimala Temple

சபரிமலை கோவிலின் நடை மீண்டும் நவம்பர் 5-ம் தேதி திறக்கவிருப்பதால் அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

 

நவம்பர் 6-ம் தேதி அன்று தீபாவளி தினத்தை ஒட்டி, திங்கள் அன்று திறக்கவுள்ள சபரிமலை கோவிலில் கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டிய அவசியம் காரணமாக தற்போது பணிகள் நடைபெறும் வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 

 

முன்னதாக பெண்களை சபரிமலைக்குள் அனுமதிப்பது தொடர்பான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையும் மீறி கலவரங்கள் நிகழ்ந்ததால், பெண்கள் ஒருவர் கூட சபரிமலை கோவிலுக்குள் செல்ல முடியாத நிலையில், தற்போது மீண்டும் சபரிமலை கோவில் நடைதிறக்கவுள்ளதால், சபரிமலை,  பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Tags : ##WOMENINSABARIMALA ##SABARIMALAFORALL #SABARIMALATEMPLE #144