வைஃபை, இணையதள வசதிகளுடன் ’ஸ்மார்ட் சிட்டி’ ஆகும் டெல்லி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 17, 2018 03:28 PM
Rajnath Singh launched Delhi \'Smart City\' projects

பிரதமர் மோடியின் ஆட்சியில் அறிமுகப் படுத்தப்பட்ட திட்டம் டிஜிட்டல் இந்தியா. இந்தியா முழுவதும் தொழில்நுட்ப வசதிகள், டிஜிட்டல் இணைப்புகளுடன்  தனிமனித விபரங்களைக் கண்காணிக்கும் ஆதார், பணமில்லா பொருளாதார முறை, 5G எனப்படும் அலைக் கற்றை இணைய சேவைகள்  உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினர், செயல்படுத்தியும் வருகின்றனர்.

 

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் இலவச WiFi மற்றும் அதிவேக பிராட்பேண்ட்  திட்டங்களுடன் கூடிய டெல்லி ஸ்மார்ட் சிட்டி புரோஜக்ட்டை யுனியன் ஹோம் மினிஸ்டர் ராஜ்நாத் சிங் கடந்த திங்களன்று தொடங்கி வைத்தார். 

 

நகரத்தின் சில இடங்களில் மட்டும் பொருத்தப்பட்டுள்ள இந்த வசதிகளை நகர மக்கள் யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சூரிய ஆற்றல் உற்பத்திக்கான சோலார் விளக்குகள், ஸ்மார்ட் போன்கள்,   இருமுனை-இணையவழி வீடியோ வழியே  பேசும் வசதி கொண்ட எல்இடி ஸ்க்ரீன் முதலானவற்றையும்  தொழில்நுட்ப, வணிகத் தளமான சர்க்கா பூங்காவில் தொடங்கி வைத்தார்.

 

Tags : #DIGITALINDIA #DELHI #RAJNATHSINGH #SMARTCITYPROJECT #DELHISMARTCITY #NARENDRAMODI