ஆன்லைன் மருந்து விற்பனை வழக்கில் உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 31, 2018 01:15 PM
Madras HighCourt Temporarily bannes online medicines in TamilNadu

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நேரடி அல்லோபதி மருந்தகங்களில் பல மருந்துகள், குறைந்த அளவு விகிதத்தில் தள்ளுபடியுடன் விற்கப்படுகின்றன. 

 

எனினும் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்தால் முறையான ஆலோசனைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது என்பதாலும், தவறுதலான மருந்துகளை உட்கொள்ள வாய்ப்பிருப்பதாலும், வெகுஜன மக்கள் போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை நேரடியாக ஆர்டர் செய்யக் கூடும் என்பதாலும் ஆன்லைன் மருந்துகளை தடை செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டதோடு, மருந்து விற்பனை சங்கங்கள் அடையாளப் போராட்டங்களையும் நடத்தின. 

 

இந்நிலையில் இதுபோன்று ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Tags : #MADRASHIGHCOURT #MEDICAL #ONLINEMEDICINE