3 வாரங்களில் பதில் அளிக்க பேஸ்புக், வாட்ஸ் ஆப்புக்கு உயர்நீதிமன்றம் கெடு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 28, 2018 06:50 PM
Chennai HC has Issued Notice to Social Medias like Facebook

பேஸ்புக், வாட்ஸ் ஆப், யூ டியூப் உள்ளிட்ட சமூகவலைதள நிறுவனங்கள் தத்தம் கணக்குகளை துவங்க இந்தியாவின் தனிநபர் அடையாளத்தை பறைசாற்றும் டிஜிட்டல் அடையாள விபரங்கள் அடங்கிய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணை தொடர்பான கருத்துக்கள் சிலவற்றை சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. 

 

இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் பேஸ்புக், வாட்ஸ் ஆப், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

மேலும் இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை அமைப்புகள் கேட்கும் பல விதமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்குமான விவரங்களை தர மறுப்பது ஏன் எனவும் அந்த சமூகவலைதள நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  அதோடு இந்த சமூக வலைதளங்கள் இந்தியாவில் ஏன் இதுவரை குறைதீர்ப்பாளர்களையோ அல்லது குறைதீர்ப்பு மையங்களையோ நியமிக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளது!

Tags : #FACEBOOK #WHATSAPP #MADRASHIGHCOURT #AADHAAR #SOCIALNETWORKS #SOCIALMEDIAS