கோவை: தனியார் கல்லூரி ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 20, 2018 03:06 PM
Coimbatore College employee sexually harassed by MD

கோவை சரவணம்பட்டியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் நிர்வாக இயக்குனர், தனது கல்லூரியில் பணிபுரியும் 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண் புவனேஸ்வரியை 2 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. 

 

கல்லூரியின் நிர்வாக இயக்குனர் சுப்ரமணியத்தின் இந்த தகாத செயல்களை அவருடைய மகனும் கல்லூரியின் தலைமை நிர்வாகியுமான நலனிடம் கூறியுள்ளார். ஆனால் அவரோ, பதிலுக்கு இந்த பெண்ணை பயமுறுத்தி வேலையைவிட்டு நீக்கப் போவதாக சொல்லவும், அதிருப்தி அடைந்த பெண் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும், பாலியல் தொல்லைகளைக் கொடுத்துவந்த நிர்வாக இயக்குனர் மீதும், இதனை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத தலைமை நிர்வாகி மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை துடியலூர்  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 

இந்நிலையில், பள்ளி இயக்குனர் மீது வழக்கு பதிவுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்வி நிலையத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது பலரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags : #SEXUALABUSE #COIMBATORE #COLLEGE